செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட ஒழுங்கிணைப்புக்குழு கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழுக்கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான 2016ம் ஆண்டுக்கான ஒருங்கிணைப்புக்;குழுக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியான கூட்டம் (27-02-2016) பகல் 9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு செயலக மண்டபத்தில் இணைத்தலைவர்களாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான இ. அங்கஜன், சிவஞானம் சிறிதரன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி, உள்ளுராட்சி, மின்சாரம், நீர் வழங்கல், வீதி அபிவிருத்தி போக்குவரத்து, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன் 2016ம் ஆண்டின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்;கான ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதிக்காகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், அங்கஜன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மாகாணசபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் பொதுமக்கள் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.