செய்திகள்

கிழக்கு முதலமைச்சருக்கு கடற்படையினால் தடைகள் சில விதிப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சர் அகமட் நசீருக்கு எந்தவொரு கடற்படை முகாமுக்குள்ளும் நுளைய முடியாது என கடற்படை தலைமையகம் அறிவித்துள்ளது.
அத்துடன் எந்தவொரு கடற்படையினரின் நிகழ்வுக்கும் அவரை அழைக்காதிருப்பதற்கும் மற்றும் அவர் கலந்துக்கொள்ளும் நிகழ்வுகளுக்கு கடற்படையினரை அனுப்பாமல் இருப்பதற்கும் கடற்படையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் திருகோணமலை சம்பூர் பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது முதலமைச்சர் கடற்படை உயர் அதிகாரியொருவரை அந்த நிகழ்ச்சி மேடையில் வைத்து தூற்றிய சம்பவத்தைத அடிப்படையாக கொண்டே கடற்படை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
n10