செய்திகள்

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு முன்பதிவு செய்துகொண்டவர்கள் மாத்திரம் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கான திகதியையும் நேரத்தையும் முன்பதிவு செய்தவர்கள் உரிய நேரத்தில் திணைக்களத்திற்கு சமுகமளிக்க வேண்டும் என குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவுறுத்தினார்.

எனினும், மருத்துவ தேவை உள்ளிட்ட அவசரத் தேவையுடையவர்கள் , தமது தேவையை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார்.

கடவுச்சீட்டுகளை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், புதிய திட்டமொன்றை அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.

எதிர்வரும் 02 வாரங்களுக்குள் புதிய திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனால் அவசரத் தேவையை தவிர்த்து, முன்கூட்டியே பதிவுகளை மேற்கொள்ளாதவர்களை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தர வேண்டாம் என குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவித்தார்.

-(3)