செய்திகள்

குருநாகல் மாவட்டத்தின் சில பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்கு

குருநாகல் மாவட்டத்தின் சில பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரும் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.அதன்படி குளியாப்பிட்டி, நரமல்ல, பன்னால, கிரியுல்ல மற்றும் தும்மலசூரிய பொலிஸ் பிரிவுகளிலேயே ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் 37 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.(15)