குற்றச்சாட்டு வந்தவுடன் மைத்திரி பதவி விலகியிருக்க வேண்டும் : கம்மன்பில
அவுஸ்திரெலியா ஊடகமொன்றினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியிட்டுள்ள செய்தி தொடர்பாக பிவித்துறு ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து வெளியிட்டுள்ளார்.
தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் அவ்வாறான குற்றச்சாட்டு வந்தவுடன் நாட்டின் கௌரவத்தை பாதுகாத்து உடனடியாக பதவி விலகியிருப்பேன் என கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பதவி விலகாது இருக்க வேண்டுமென்றால் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக ஜனாதிபதி இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள பெரிய விசாரணை குழுவான ஜனாதிபதி விசாரணை குழுவை அமைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




