செய்திகள்

”குற்றஞ்சாட்டப்பட்ட அரச தரப்பே விசாரணை நடத்துவதில் நீதி கிடைக்கப் போவதில்லை”

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அரச தரப்பே விசாரணை நடத்துவதில் நீதி கிடைக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவரின் முழுமையான உரை வருமாறு,

சட்டம் மற்றும் நீதித்துறை விடயத்தில் ஒரு மிக முக்கியமான கோட்பாடு உள்ளது. நீதி வழங்கப்படுவதற்கு முன்னர் நீதி வழப்படுவது உறுதிபடுத்தப்படவேண்டும் என்று அது கூறுகிறது. இப்போது எனது உரையை இந்த கோட்பாட்டுடன் தொடங்க விரும்புகிறேன், ஏனென்றால் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பிமல் ரத்நாயக்க பேசும்போது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியை அவர் விளக்கினார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் நோக்கங்கள் பற்றியும் குறிப்பிட்டார். தேர்தலில் தோல்வியடைந்த ராஜபக்ஸர்கள், அரசாங்கத்திற்குள் உள்ள தங்கள் முகவர்கள் மூலம் இந்த சம்பவத்தை திட்டமிட்டனர். அவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நாட்டிற்குள் ஒரு பய மனநிலையை உருவாக்கினர். பாதுகாப்பைப் பொறுத்தவரை ஒரு பெரிய வெற்றிடம் உள்ளது என்பதைக் காட்டவும் – ராஜபக்ஸாக்கள் குறிப்பாக கோத்தபய ராஜபக்ஸ போன்ற ஒருவரால் மட்டுமே அந்த பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டம்தான் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் உச்சத்தை அடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
அது சரிதான். நான் ஒப்புக்கொள்கிறேன்.
2000 ஆம் ஆண்டில் ஒரு அரசாங்கத்தின் அரசியல் செல்வாக்கு தோற்கடிக்கப்பட்ட நிலையில்- அவர்களின் தோல்விக்கு பின்னரான 4 ஆண்டுகளுக்குப் பிறகும்இ இதுபோன்ற ஒரு சம்பவத்தை வைத்து மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு இந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் நாட்டின் கட்டமைப்பிற்குள் கணிசமான செல்வாக்கை செலுத்தியது என்பதையும் அவர் மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார்.
கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினரே!
இப்போது நான் கேட்பது என்னவென்றால் –
நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல் நீதி வழப்படுவது உறுதிபடுத்தபடவேண்டும் என்று உண்மையிலேயே விரும்பும் எந்தவொரு நியாயமான நபரும்- ராஜபக்ஸாக்கள் ஆட்சியில் இருந்த 20 ஆண்டுகளாக மட்டுமல்லாமல் – 2006 ஆம் ஆண்டு மிகவும் செல்வாக்கு பெற்ற ஒரு அரச கட்டமைப்பையும் நம்பியிருக்க முடியுமா?
மஹிந்த ராஜபக்ஸாக்கள் 2006 இல் தொடங்கிய 10 ஆண்டுகள் இருந்தாலும் 1994 முதல் அதற்கு முன் 10 ஆண்டுகள் கூட அவர்கள் மிக உயர்ந்த பதவியில் இருந்தனர். 94 ஆம் ஆண்டு முதல், அதாவது – அரச கட்டமைப்பிற்குள் அவர்கள் செல்வாக்கு செலுத்திய 20 ஆண்டுகால அதிகாரத்தை நீங்கள் ஆட்சிக்கு வந்த ஆறு அல்லது ஏழு மாதங்களுக்குள் அகற்ற முடியுமா?
அது சாத்தியமா? யாரை முட்டாளாக்குகிறீர்கள்?
யதார்த்தம் என்னவென்றால்- குறித்த குற்றங்கள் தொடர்பில் நாடே குற்றம் சாட்டும் தரப்பினராக அவர்கள் இருக்கும்போது – நாட்டின் சில பிரிவுகள் மிகவும் ஊழல் நிறைந்ததாக இருக்கும்போது- அரசியல் ரீதியாக தலையீடு செலுத்தப்படுவதாக நீங்கள் குற்றஞ்சாட்டுகிறீர்கள். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நீங்கள் அனைவரும் ராஜபக்ஸ தரப்பை சாடுகிறீர்கள். ஆனால் 1948 முதல் 76 ஆண்டுகளாக இந்த நாட்டில் அரசியல் தலையீடு மேலோங்கியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.
இங்கு ஆட்சி நிறுவனங்கள் ஒருபோதும் சுதந்திரமாக இருந்ததில்லை. அரசியல் தலையீடு எப்போதும் இருந்து வருகிறது. அரசியல்வாதிகள் நாட்டைக் கட்டுப்படுத்துகிறார்கள். அதனால்தான் ஒரு தோல்வியுற்ற நாடாக உள்ளது. அதனால்தான் நாம் ஒரு வீழ்ச்சியுற்ற அரசு என்று பார்க்கப்படுகிறோம். மக்களும் கூட அதை உணரத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் பொருளாதார நெருக்கடியால் அடிமட்டத்தில் இருந்ததால் ஒரு மாற்றத்தை விரும்பினர். இதுதான் யதார்த்தம்.
இந்த அரசாங்கமும் அதே அடிப்படையிலான அரசாங்க கட்டமைப்பை வைத்திருப்பதன் மூலம் நீதியைப் பெற முடியும் என்று நினைத்தால்இ நீங்கள் ஒரு கனவு உலகில் இருக்கிறீர்கள். அப்படியான ஒரு அரச கட்டமைப்பு இந்த கொடூரமான குற்றத்திற்குப் பின்னால் உள்ள உண்மையான குற்றவாளிகளை ஒருபோதும் நீதியின் முன் நிறுத்தாது. எனவே நீதி நிலைநாட்டப்படாது. அப்படி நடந்தாலும் பெரிய புள்ளிகளை விட்டுவிட்டு சில்லறைகளை மட்டுமே நீங்கள் பிடிப்பீர்கள்.
கௌரவ தலைமை தாங்கும் உறுப்பினரே! நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால்- அரச கட்டமைப்பு குற்றம் சாட்டப்பட்ட தரப்பினராக இருக்கும் போது- அந்தக் குற்றத்திற்கான உள்ளக விசாரணையின் போது- அரசு ஒரு கூட்டாளியாகவோ அல்லது அதன் உடந்தையாகவோ பார்க்கப்படுகிறது- குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர் எவ்வாறு தன்னைத்தானே விசாரிக்க முடியும்? இதுவே மிகப்பெரிய குற்றச்சாட்டாகும். இது இயற்கை நீதிக் கோட்பாட்டுக்கு எதிரானதாகும்.
அதனால்தான்- பிரேரணையின் ஐந்தாவது பிரிவு சர்வதேச உதவியைப் பெற்ற ஒரு சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் பற்றிப் பேசுகிறது. நான் அதை ஏற்கவில்லை. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் போன்ற ஒரு குற்றச் செயலைஇ அரசு குற்றம் சாட்டப்பட்ட தரப்பாகக் கருதுவது சர்வதேசத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அந்த அரச கட்டமைப்பின் மீது உங்களுக்கு அதிகாரம் இல்லை.
நீதித்துறை அமைச்சரின் பெயர் நாடாளுமன்றத்தில் டாக்டர் என்று பதிவு செய்யப்பட்டதால்- தனக்கெதிராக நாசவேலை நடந்திருப்பதாக அவர் சந்தேககித்தார். இதற்காக அவரால் குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் அளிக்க வேண்டியிருந்தது. இந்த விடயத்திலும் அரசியல் தலையீடு அவ்வளவு ஆழமாக இருந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
எனவே இத்தகைய சூழ்நிலையில்- என் வார்த்தைகளைக்; குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையான நீதியை விரும்பினாலும் உங்களுக்கு அது ஒருபோதும் கிடைக்காது. உங்களுக்கு அது ஒருபோதும் கிடைக்காது- ஏனென்றால் உங்களிடம் அதன் கட்டுப்பாடு இல்லை. சுதந்திரமான முறையில் உங்களால் அதனை கட்டுப்படுத்தவும் முடியாது. அதுதான் உண்மை.
அடுத்து செம்மணியின் சூழ்நிலையைப் பாருங்கள். தமிழர்களின் நிலையைப் பாருங்கள். ஒரு அரசாங்கமாக நீங்கள் போரை ஆதரித்தீர்கள். நீங்கள் சந்திரிகா அரசாங்கத்துடன் அங்கமான ஒரு கட்சியாகவும் இருந்தீர்கள். மேலும் சந்திரிகா அரசாங்கம் செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட தரப்பாகும். மனிதப் புதைகுழிகள் முதல் முறையாக 2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1996 அல்லது 97 ஆம் ஆண்டுகளில் இருந்தது.. பின்னர் 15 உடல்களை பற்றியே விசாரணைகளில் வெளிவந்தன. கிருசாந்தி குமாரசுவாமி வழக்கில் எனது தந்தையார் கிருசாந்தி குமாரசுவாமி குடும்பத்தின் நலன்களைக் கவனித்த வழக்கறிஞர் என்பதால் இதை நான் அறிவேன். கிருசாந்தி குமாரசுவாமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரது ஆவண அறிக்கையில்- செம்மணி பகுதியில் 500 முதல் 600 க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டிருந்ததாகக் கூறியிருந்தாலும்- 15 மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழியானது அந்த இடத்திலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் உள்ளன.
எனவே- குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பாக இருந்த அரசு – அப்போது கவலைப்படவே இல்லை. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் விவரங்களை வழங்கி – தற்போதைய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களிலிருந்து சுமார் 100 யார் தொலைவில் உள்ளதாக- அந்த இடங்களின் விவரங்களைக் கொடுத்த போதிலும் கவலைப்படவே இல்லை. அரசே குற்றம் சாட்டப்பட்ட தரப்பாக இருக்கும்போது இப்படிதான் நடக்கும்.
இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன். இது தமிழ் சிங்கள முஸ்லிம் விடயமாக இல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி கிடைத்ததாக உணர்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கு, நடந்த குற்றங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சட்டப்பூர்வத்தன்மையை நீங்கள் விரும்புகிறீர்களா? என்பதையே நான் கேட்க விரும்புகிறேன்.
அரசே குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பாக இருக்கும் போது- குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை இல்லாமல்- உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு நீங்கள் உண்மையானவர்களாக இருந்தாலும் கூட – செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் நீங்கள் உண்மையாக இருக்கமாட்டீர்கள் என்பதை நிச்சயமாக நான் உங்களுக்குச் சொல்ல முடியும். ஏனென்றால் நீங்கள் அனைவரும் போரை விரும்பினீர்கள். நீங்கள் அனைவரும் போரை ஆதரித்தீர்கள்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக ஒருபோதும் வழக்குத் தொடரப்படாது என்றும் உண்மையை கண்டறிவதற்கு ஆணைக்குழு மட்டுமே உருவாக்கப்படும் என்றும் உங்கள் ஜனாதிபதியே தெரிவித்துள்ள நிலையில் – உடைந்த இந்த அரசை நீங்கள் சரிசெய்ய விரும்பினால், பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் இருந்து செயற்படும் அரசாங்கம் உங்களிடம் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நீங்கள் செயலாற்றவேண்டும்.
கௌரவ தலைமை தாங்கும் உறுப்பினரே!
இன்னொரு விடயத்தைச் சொல்ல விரும்புகிறேன். 2024 அக்டோபர் 23 ஆம் தேதி- முஹம்மது சுஹால் முஹம்மது ரிஃபி என்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். 9 மாதங்கள் ஆகின்றன. அவர் தற்போது பயங்கரவாத தடுப்பு காவலில் இருக்கிறார். அவர் மாவனல்லவைச் சேர்ந்தவர். அவர் ஒரு மாணவர். அவர் கொழும்பில் கல்வி கற்று வந்துள்ளார். அவர் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டார். அங்கு அவர்கள் அடையாள அட்டையை கேட்டனர். அவரிடம் அடையாள அட்டை இருக்கவில்லை. அவர் தெஹிவளை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 25 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது தந்தை அடையாள அட்டையை சமர்ப்பித்ததால் விடுவிக்கப்பட்டார். அவர் உடனடியாகவே மாவனல்லவுக்குச் சென்றார். மாவனல்லவுக்கு இரவு சென்ற தெஹிவளை பொலிஸார் மீண்டும் அவரை கைது செய்தனர்.
அவரது தொலைபேசியில் இஸ்ரேலியர்களுக்கு எதிராக பாலஸ்தீனியர்களை ஆதரிப்பது தொடர்பான சில பதிவுகள் இருப்பதாகக் இம் முறை அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த பதிவு இப்போது நீதிமன்றத்தில் ‘பீ ‘அறிக்கையில் உள்ளது. அது ஒரு உணர்வையோ பொருளையோ சித்திரிக்கும் ஒரு படமாகும். அது இஸ்ரேலியக் கொடியினை வாள் நீட்டிய ஒரு நபர். கொடியைக் குத்துவது போன்று இருப்பதாக இருந்தாலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து 9 மாதங்கள் தடுத்து வைக்கப்படுமளவிற்கு அது எப்படி காரணமாக இருக்க முடியும்?
கௌரவ அமைச்சரே 9 மாதங்கள் என்பது நியாயமானதா? இது அபத்தமானது. இது அபத்தமானது.
அது கருத்து சுதந்திரமாகும். கருத்து சுதந்திரம். எப்படி ஒரு குற்றமாக இருக்க முடியும்? கடவுளின் பெயரால் உங்களுக்குச் சொல்கிறேன், இவைதான் சாதாரண அப்பாவி மக்களை தங்கள் குடி உரிமைகளை அரசு கட்டமைப்பிற்கு எதிராக மிகவும் வெறுப்பாகவும் பாரபட்சமாகவும் உணர வைக்கின்றன. ஏனென்றால் கடந்த அரசாங்கங்களும் இப்படித்தான் நடந்து கொண்டனர். நீதிமன்ற விடயங்களில் அமைச்சு தலையிடக்கூடாது என்பதில் நான் முற்றிலும் உடன்படுகிறேன். ஆனால் பொலிஸார் பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். கடவுளின் பொருட்டு, இவ்விடயத்தில் தலையிட்டு இந்த மக்களை முழுமையாக விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.