செய்திகள்

குற்றம் செய்த இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் : மகிந்த அமரவீர

குற்றச் செயல்களில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மகிந்த அமரவீரவே இதனை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழிக்கும் போர்வையில் யாரேனும் இராணுவத்தினர் குற்றச் செயலில் ஈடுபட்டிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது அவ்வாறானவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இராணுவத்தினர் என்பதற்காக சும்மா இருந்துவிட முடியாது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)