குற்றம் நிரூபிக்கப்பட்டால் வேலை பறிபோகும்
கால்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படின், அவர் வேலைநீக்கம் செய்யப்படுவாரென கடற்படை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுமதியின்றி வெளிநாடு சென்றமை, கடற்படை அதிகாரியாக இருந்தபோதிலும் அரசியலில் ஈடுபட்டமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக, அவருக்கு எதிராக விசாரணைகள் நடப்பதாக கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி கூறினார்.
இந்த இரண்டு குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடந்து கொண்டிருக்கையில், பணச்சலவைக் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ‘பணச்சலவைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் கடற்படையிலிருந்து விலக்கப்படுவார்’ என அவர் கூறினார்.
கால்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்;க் நிறுவனத்தின் நிதி முறைகேடு தொடர்பில் யோஷிதவை, நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு, கடந்த ஜனவரி 30ஆம் திகதியன்று, கடற்படைத் தலைமையகத்தில் விசாரித்தது. யோஷிதவுடன் 4 பேர், எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
n10




