செய்திகள்

குளவி கொட்டியதால் 10 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு (படங்கள்)

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிங்கிபோனி தோட்ட பகுதியில் இன்று 11.05.2015 அன்று பிற்பகல் வேளையில் குளவி கொட்டியதால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் தேயிலைப் பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவிகள் இவ்வாறு தங்களை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின் 6 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

DSC08977

DSC08978

DSC08980

DSC08981

DSC08982

DSC08984

DSC08986