குளிரால் இறந்த கால்நடைகள்: கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு ஒருவாரம் பூட்டு
மட்டக்களப்பு அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் குளிர் காலநிலை காரணமாக பல இடங்களில் பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகள் உயிரிழந்தமை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனை தொடர்ந்து இறந்த கால்நடைகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படலாம் என்ற காரணத்தினால் அங்குள்ள இறைச்சி கடைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு மாகாணத்தில் குளிரால் இறந்த கால்நடைகள் முறையாக அடக்கம் செய்யப்படுவதை உறுதிப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
-(3)




