தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளை அலுவலகம் ஒன்று முல்லைத்தீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் திறந்துவைத்து உரையாற்றினார். வடமாகாண சபை உறுப்பினர் டாக்டர் சி.சிவமோகனினால் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.




