கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு இன்று கொழும்பில் கூடுகின்றது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் குழுவான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்திருந்தனர். இந்தக் குழுவின் கூட்டம் கடந்த மாதம் மூன்றாம் வாரத்தில் இடம்பெற்றிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே இன்றைய கூட்டம் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், மீள்குடியமர்வு, அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையிலான உட்கட்சி விவகாரங்களும் ஆராயப்படவுள்ளன.
R-06




