செய்திகள்

கூட்டமைப்புடன் இணைந்து மூனை முதலமைச்சர் சந்திப்பாரா? இன்னும் முடிவில்லை என்கிறார்

நாளை மறுதினம் முதலாம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கான பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின்  போதுஇ வடமாகாணத்திற்கு செல்லும் அவர், நலன்புரி முகாம்களையும் பார்வையிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தன்னை சந்திப்பதற்கு தனியாக அழைப்பு விடுக்கப்படவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். ஆனால் கட்சியின் தலைவரை தொடர்பு கொண்டு கட்சி ரீதியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொள்ளுமாறு தலைவர் சம்பந்தன் என்னிடம் கோரியிருந்தார். சந்திக்க வேண்டுமாயின் நீங்களும் வந்து இணைந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார் என வடக்கு முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். இருந்தபோதிலும் அது குறித்து தான் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
-06