செய்திகள்

கூட்டமைப்பு பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் கூட்டத்திற்கு கடும் பாதுகாப்பு

வவுனியாவில் இன்று நடைபெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் கூட்டத்திற்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இக் கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக கூட்டம் நடைபெறவுள்ள விருந்தினர் விடுதி மண்டபம் விசேட அதிரடிப்படையால் சல்லடை போட்டு சோதனை செய்யப்பட்டது.

IMG_0355

IMG_0249

IMG_0244

N5