கூட்டமைப்பை திருப்திப்படுத்த படைவீரர்களின் நினைவுத் துபிகள் அகற்றல்: மகிந்த குற்றச்சாட்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திருப்திபடுத்தும் நோக்கில் படைவீரர் நினைவுத் தூபிகள் அகற்றப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மிகிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
குருணாகல் மாலிகாபிட்டி பகுதியில் எதிர்வரும் 4ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை திருப்திபடுத்தும் நோக்கில் மாலிகபிட்டியவிற்கு அருகாமையில் அமைந்துள்ள படைவீரர் நினைவுத் தூபி அகற்றப்பட உள்ளதாகத் தமக்க தகவல் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நினைவுத் தூபியை அகற்றக் கூடாது எனக் கோரி இன்றைய தினம் போராட்டமொன்றும் அந்தப் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷவும் அந்தப் பகுதிக்கு சமூகமளித்திருந்தார்.
-06




