கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் , தொழில் ஆணையாளர் , கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட முதலாளிமார் சம்மேளம் மற்றும் தொழிற்சங்கங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளத்தை கொடுக்காமை , உரிமைகள் தொடர்பாக கவனம் செலுத்தாமை , கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட விடயங்களை மக்களுக்கு வெளியிடாமை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. -(3)




