செய்திகள்

கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை பெப்ரவரி 21 விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் தீர்மானம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு உடன்படிக்கை, சட்டத்திற்கு முரணானது எனத் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்குத் தகுதியானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதன்படி இந்த மனுவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரீசீலனைக்கு உட்படுத்தப்பட்டபோதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான சட்டத்தரணி இயைளதம்பி தம்பையாவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள 21 பிரதிவாதிகளையும் குறித்த தினத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழில் அமைச்சர், தொழில் ஆணையாளர் ஆகியோரும், இலங்கை முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட தொழிற் சங்கங்கள் ஆகியன மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
தொழிலாளர் சட்டங்களை மீறும் வகையிலும், ஏற்கனவே இருந்த தொழிலாளர் உரிமைகளை மறுக்கும் வகையிலும் கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தம்பையா தெரிவித்துள்ளார். -(3)