கூட்டு ஒப்பந்தத்தை மீறும் தோட்ட நிர்வாகங்கள் : ஒத்தி வைக்கப்படும் பேச்சுவார்த்தை
தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தை மீறி செயற்படும் தோட்டக் கம்பனிகள் தொடர்பாக இன்று (31) நடைபெறவிருந்த தொழிலமைச்சர், முலாளிமார் சம்மேளனம் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திகதியெதுவும் தீர்மானிக்கப்படாதே பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா. தலைவர் முத்துசிவலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
கூட்டுஒப்பந்ததத்தில் குறிப்பிடப்பட்டவாறு பல தோட்ட கம்பனிகள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில்லையென்பதுடன் கூட்டு ஒப்பந்தத்தை மீறியே அந்த கம்பனிகள் செயற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. -(3)




