செய்திகள்

கேப்பாபிலவு மக்களுக்கு எதிர்வரும் நாட்களில் தீர்வு : கூட்டமைப்பினரிடம் ஜனாதிபதி உறுதி

கேப்பாபிலவு மக்களின் காணி பிரச்சினைக்கு துரித கதியில் தீர்வு காண்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாகவும் இதன்படி எதிர்வரும் நாட்களில் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென கருதுவதாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று கொழும்பில் எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டது. அதில் உரையாற்றிய சம்பந்தன் தெரிவித்துள்ளதாவது,
அந்த மக்கள் தொடர்ந்தும் போராடி வருவதாகவும் இதற்கு தீர்வு காண வேண்டுமென்றும் ஜனாதிபதியிடம் நாம் கோரியிருந்தோம். இதன்போது அந்த பிரச்சினைக்கு தீர்வு காண தயார் என தெரிவித்திருந்தார். இதன்படி அந்த மக்களை விரும்பிய இடத்தில் குடியமர்த்த நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். ஏற்கனவே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதில் காணியில் வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இருக்க விரும்பினால் அதில் இருக்கலாம் இல்லாவிட்டால் கேப்பாபிலவில் குறித்த காணி பகுதியில் இருக்கலாம். அவர்கள் முடிவெடுத்து அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டும். இதேவேளை புதுக்குடியிருப்பை பொருத்தவரையில் வன பாதுகாப்பு பிரிவினருக்கு உரிய காணி பகுதியும் உள்ளது அவற்றை இராணுவத்தினரிடம் விடுவித்து அதனூடாக மக்களுக்கு விடுவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)