செய்திகள்

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் 21 ஆவது நாளாக தொடர்கிறது: மாணவர்களும் போராட்டத்தில் குதிப்பு

இராணுவத்தினர் வசம் உள்ள காணிகளை விடுவிக்கும் தமிழ் மக்களின் போராட்டத்தில் பாடசாலை மாணவர்களும் இன்று முதல் குதித்துள்ளனர்.

வடக்கின் பல இடங்களிலும் உள்ள பாடசாலைகளின் மாணவர்கள் இன்று காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணி வரை ஒரு மணி நேரம் பாடசாலைகள் முன்பாக கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக பல்வேறு சுலோகங்களை எழுப்பியதுடன் மற்றும் பதாகைகளை ஏந்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். நல்லாட்சி அரசே 54 பாடசாலை மாணவர்களின் கல்வியை பாழாக்காதே, இலங்கை படையே பூர்விக காணிகளை எம்மிடம் கையளித்துவிடு,கேப்பாபுலவு சிறுவர்களின் கல்வியை சிதைக்கும் அரசே இதுவா? உன் நல்லாட்சி போன்ற பதாகைகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இந்த போராட்டங்களில் ஈடுப்பட்டனர்.

இதேவேளை, முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் நில மீட்பு போராட்டம் தொடர்ந்து 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

2 3