செய்திகள்

கேரள ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய த்ரிஷா

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஹீரோயினாக கொடிகட்டி பறப்பவர் த்ரிஷா. அவர் நடித்த பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.

தற்போது அவர் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரை வெகுநாட்களாக மலையாள சினிமாவில் காணவேண்டும் என ஆசைப்பட்ட கேரள ரசிகர்களின் ஆசை நிறைவேறவுள்ளது.

இந்த படத்தில் ப்ரேமம் புகழ் ஹீரோ நிவின் பாலியுடன் த்ரிஷா ஜோடி சேரவுள்ளார். ஷியாம்பிரசாத் இயக்கவுள்ள இந்த படம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

N5