பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களினால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக அதற்கு பதிலளிப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சபையில் இருப்பது கட்டாயமாகுமென சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்படி சபையில் சம்பந்தப்பட்ட அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் இருக்க வேண்டுமென சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை செயற்படுத்தும் வகையில் பாராளுமன்ற நிலையியல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் எம்.பிகளினால் விடயமொன்று தொடர்பாக கேள்வியெழுப்பும்போது அதற்கு பதிலளிப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சபையில் இருக்காமையினால் சிக்கல் நிலைமைகள் ஏற்படுவதன் காரணமாகவே சபாநாயகர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
n10