செய்திகள்

கைது செய்யப்படும் பிரபுக்கள் வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்படுவது ஏன் : பாராளுமன்றத்தில் கேள்வி

பாரியளவிலான நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்படும் முக்கிய பிரமுகர்கள் சிறைச்சாலையில் இருக்காது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் கேள்விகள் எழுப்பப்பட்டன.

பாரியளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்கள் சிறைக்கு அனுப்பப்படாது வைத்தியசாலைக்கு அனுப்பும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. கண்டியிலிருந்து கொழும்புக்கு நடை பேரணி நடத்த இருந்தவர்களுக்கு சிறைக்குள் சென்றவுடன் திடீரென நோய்கள் வருகின்றன. இது ஏன் என அவர் சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் கேள்விகளை எழுப்பினார்.

இதன்போது அவர்களுக்காகவே இனி விசேட வாட்டுகளை திறக்க வேண்டும் போல் இருக்கின்றது. என அனுரகுமார எம்.பி தெரிவித்துள்ளார்.

தற்போது பஸில் ராஜபக்‌ஷ அவ்வாறு வைத்தியசாலையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

N5