செய்திகள்

கைது

கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவியின் தற்கொலை முயற்சிக்கு காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஆசிரியரை  பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிசார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தவறாக நடக்க முற்பட்டதாகவும் இதனால் உள ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவி கடந்த வியாழக்கிழமை கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இதுதொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப்பொலிசார் மேற்கொண்டதுடன் இச்சம்பவத்துடன்தொடர்புபட்டதாக கூறப்படும் குறித்த ஆசிரியரை கைதுசெய்து  நேற்று பகல் கிளிநொச்சி பெண்கள் சிறுவர்பிரிவுப்பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த ஆசியரை கைது செய்து இன்றைய தினம்நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
n10