செய்திகள்
கொக்கட்டிச்சோலை பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட கண்டியனாற்றில் ஆயுதங்கள் மீட்பு
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட கண்டியனாறு பகுதியில், பயன்படுத்த முடியாத இரண்டு ரொக்கட் லோஞ்சர்கள் மற்றும் அதற்கு பாவிக்கும் எட்டுக்குண்டுகள் என்பவை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை குறித்த பகுதிக்குச் சென்ற இராணுவத்தினர் இவ்வாயுதங்களை மீட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
n10




