செய்திகள்

கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள்: ஜனாதிபதி, பிரதமரிடம் நாமல் கோரிக்கை

அளித்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்சிகளுக்கான உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னதாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினால் மேற்கொள்ளப்படும் பாத யாத்திரையை தடுக்கும் நோக்கில் திடீரென இரண்டு கட்சிகளும் கட்சி உறுப்பினர் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான இடையூறுகளின் மூலம் பாத யாத்திரைப் போராட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். போராட்டத்தில் பங்கேற்பதற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அணி திரண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
R-06