செய்திகள்

கொட்டாஞ்சேனையில் உயிரிந்த மூவர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு கொட்டாஞ்சேனை சென் பெனடிக் மாவத்தையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் நஞ்சறுந்தி தற்கொலை செய்துக்கொள்ளப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்ற போதும் அதில் சந்தேகங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக தற்போது பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறாக தந்தையான 47 வயதுடைய வாசுதேவன் சிவக்குமார், மகளான 12 வயதுடைய கதர்ஷனி சிவக்குமார் மற்றும் மகனான 9 வயதுடைய நவித்திரன் சிவக்குமார் ஆகியோரே சடலங்களாக மீட்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 46 வயதுடைய நபரின் மனைவி வெளியில் சென்றிருந்த சமயத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இறுதியாக குளிபானமொன்றை அருந்தியுள்ளதுடன் அதில் நஞ்சை கலந்து குடித்தார்களா அல்லது வேறு யாரும் அதில் நஞ்சை கலந்தார்களா என்பது தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவர்களின் வீட்டை குத்தகைக்கு வேறு நபர்களுக்கு கொடுத்துவிட்டு இவர்கள் வாடகைக்கு வீடொன்றில் வசித்து வந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   -(3)