கொட்டாஞ்சேனை கத்திக்குத்து சம்பவம்; மேலதிக தகவல்
கொழும்பு கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை (18) இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடையொன்றின் முன்னால் நின்றுக்கொண்டிருந்த நபரொருவரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன நிலையில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




