செய்திகள்

கொரகொல்லவுக்கு பாதுகாப்பை கோரும் சந்திரிக்கா

மகிந்த அணியின் பாதயாத்திரை இன்று கொரகொல்ல பிரேதசத்தினூடாக இடம்பெறவுள்ள நிலையில் அங்கு விசேட பாதுகாப்புகளை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க பொலிஸ் மா அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அங்கு தனது தந்தையான பண்டாரநாயக்கவின் நினைவு தூபி இருப்பதாகவும் அதனால் அதற்கு உரிய பாதுகாப்புகளை வழங்குமாறும் அவர் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் அந்த தூபிக்கு சேதம் விளைவிக்க சிலர் முயற்சித்துள்ளதாகவும் இதனால் இன்றைய தினம் அதற்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டுமனவும் அவர் தெரிவித்துள்ளார்.