செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றிய சீனப் பெண் முற்றாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டு கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சைப் பெற்றுவந்த சீன பெண் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றுள்ளார்.
இவரின் உடலில் இருந்த வைரஸ் முற்றாக நீங்கியுள்ள நிலையில் இவர் முற்றாக குணமடைந்துள்ளார். இதன்படி இன்று முற்பகல் வைத்தியசாலையிலிருந்து அவர் வெளியேறி சென்றுள்ளார்.
வைத்தியசாலையிலிருந்து வெளியேறி செல்லும் போது வைத்தியசாலை அதிகாரிகளுக்கு அவரால் நன்றி தெரிவிக்கப்பட்டது. -(3)




