செய்திகள்

கொள்ளையர்களின் துப்பாக்கி சூட்டில் நகைக்கடை உரிமையாளர் பலி

மினுவங்கொட பகுதியில் நகைக் கடையொன்றுக்குள் புகுந்த கொள்ளையர் குழுவொன்று மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நகைக்கடையின் உரிமையாளர் பலியாகியுள்ளார்.
இன்று மாலை 7 மணியளவில் இந்த சம்பவர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 40 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மினுவங்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.