செய்திகள்

கொழும்பின் அழகை ரசிக்க விசேட பஸ்

பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பின் அழகை ரசிப்பதற்காக விசேட பஸ் சேவைகளை நடத்துவதற்கு இலங்கை போக்கு வரத்து சேவை நடவடிக்கையெடுத்துள்ளது.
இதன்படி இரண்டு தட்டு பஸ்கள் 4 சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இதனை முன்பதிவு செய்துக்கொள்ள விரும்புவோர் 0117 706 440 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அந்த சபை கோரிக்கை விடுத்துள்ளது.
நாள் கட்டண அடிப்படையில் இந்த பஸ்கள் வழங்கப்படுமென அந்த சபை தெரிவித்துள்ளது. -(3)