செய்திகள்

கொழும்பிலிருந்து அழைத்துவரப்பட்ட குண்டர்களே மோதலை ஏற்படுத்தினர் : ராஜபக்‌ஷக்கள் குற்றச்சாட்டு

அம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் பின்னணியில் அரசாங்கத்தினால் கொழும்பிலிருந்து அழைத்து வரப்பட்ட குண்டர்கள் குழுவே இருப்பதாக பராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பொதுமக்கள் அமைதியான பேரணியையே நடத்தியதாகவும் ஆனால் அமைச்சர்கள் சிலரால் கொழும்பிலிருந்து பஸ்களில் அழைத்து வரப்பட்டிருந்த குழுவினரே மோதல் நிலைமையை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். -(3)