செய்திகள்

கொழும்பிலுள்ள பிரிட்டன் வீசா அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றம்

கொழும்பு யூனியன் பிளேசில் இயங்கும் பிரிட்டனுக்கான வீசா விண்ணப்பங்களை வழங்கும் அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கொழும்பு 10இல் அமைந்துள்ள இலக்கம் 75 அர்னால்ட் ரத்நாயக்க மாவத்தையிலுள்ள கட்டடத்தொகுதியில் அதன் செயற்பாடுகள் நடைபெறவுள்ளன.
புதிய விசா அலுவலகம் வார நாட்களில் காலை 9.00 மணியிலிருந்து பிற்பகல் 2.00 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)