கொழும்பில் அமைக்கப்படவிருந்த உயரமான நத்தார் மரத்தை அமைக்கும் பணிகள் நிறுத்தம்
கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அமைக்கப்படவிருந்த உலகில் மிக உயரமான நத்தார் மரத்தை அமைக்கும் பணிகள் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அதன் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதனை தற்போது இடை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுக அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
375 அடி உயரமான இந்த மரத்தினை நிர்மாணிப்பதற்கு ரூபா 200 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த மரத்தை அமைக்கும் பணிகளுக்கு கத்தோலிக்க அமைப்புகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன் இதற்கு வீணாக செலவு செய்யும் பணத்தை ஏழை மக்களுக்காக செலவழிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)




