கொழும்பில் ஆண்களின் விதைப்பை கடத்தல்: வெளியான பரபரப்பு தகவல்!
கொழும்பு பொரளையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் ஆண்களின் விதைப்பை கடத்தல் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சிறுநீரகக் கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் பொரளை தனியார் வைத்தியசாலையின் ஊடாகவே விதைப் பை கடத்தலும் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த வைத்தியசாலைக்கு சிறுநீரக தானம் செய்ய ஆட்களை அறிமுகப்படுத்திய ´பாய்´ எனப்படும் பிரதான தரகர் விதைப்பைகளை தானம் செய்ய ஆட்களையும் அறிமுகப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொடுக்கப்படும் ஒரு விதைப்பையை 70 லட்சம் ரூபாய்க்கு குறித்த நபர் ஏலம் கோரியுள்ளார்.
தனது தேவைகளை பூர்த்தி செய்யவும், வீடு வாங்கவும் தனது விதைப்பைகளை தானமாக வழங்க ஒப்புக்கொண்டதாக குறித்த மோசடியில் சிக்கிய இளைஞர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
எனினும் சிறுநீரகத்தை தானமாக வழங்கியவர்களுக்கு வைத்தியசாலை பணம் வழங்காத காரணத்தினால் இந்த இளைஞன் தனது விதைப்பையை தானமாக வழங்க மறுத்துள்ளார்.
அது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அந்த இளைஞன்,
பாய் என்ற நபருக்கு வைத்தியசாலையில் வைத்து எனது தம்பி சிறுநீரகத்தை கொடுத்தான். 22 இலட்சம் ரூபாய் கொடுத்தார்கள். 32 இலட்சம் எனக்கூறி 22 இலட்சம் ரூபாய்தான் கொடுத்தார்கள். தம்பியின் பணத்தை என்னிடம்தான் கொடுத்தார்கள். வைத்தியசாலையின் மூன்றாம் மாடியில் வைத்துதான் பணம் தந்தார்கள். தம்பி கொடுத்ததால் எனக்கும் கடன் இருந்ததால் வீடு வாங்க வேண்டும் என்பதால் நானும் கொடுக்க இருந்தேன்.
கொடுக்க செல்லும் போது எனது உடல் எடை அதிகம் என கூறினார்கள். உடல் எடையை குறைக்க கூறினார்கள். பின்னர் பாய் என்னிடம் கேட்டார். உனக்கு குழந்தைகள் இருக்கிறார்களா என்று. நான் ஆம் என்றேன். உனக்கு இடது பக்க விதைப்பையை கொடுக்க விருப்பமான என 70 இலட்சம் ரூபாய் தருவதாக கூறினார்.
நான் அதற்கு விருப்பம் தெரிவித்தேன். எந்த வைத்தியசாலை என நான் கேட்டேன். தம்பி சிறுநீரகத்தை கொடுத்த வைத்தியசாலையில்தான் என்றார். 70 இலட்சத்திற்கு கொடுக்க நான் விரும்பம் தெரிவித்தேன். பின்னர் 70 இலட்சம் தருவதாக அவர் கூறினார். இதை கொடத்த பின்னர் குழந்தைகள் பிறக்காது என அவர் தெரிவித்தார்.
இதற்கு விருப்பமா என கேட்டார். பணம் கிடைப்பதாலும் கடன் இருப்பதாலும் விருப்பம் என கூறினேன். பணம் தராததால் நான் செய்யவில்லை. பின்னர் விதைப்பை கொடுக்க நான் செல்லவில்லை என்று கூறியுள்ளார்.
-(3)




