செய்திகள்

கொழும்பில் துப்பாக்கிச் சூடு!

மாளிகாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மாளிகாவத்தை காவல்நிலையத்துக்கு அருகிலுள்ள முச்சக்கர வண்டி உதிரிபாக விற்பனை நிலையமொன்றில் பணிபுரிந்துவந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

உந்துருளியில் பிரவேசித்த இருவரால் ரீ 56 ரக துப்பாக்கியினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.