செய்திகள்

கொழும்பில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு – குழப்பம் விளைவித்த சிங்களவர்கள்!

கொழும்பு- வெள்ளவத்தை கடற்கரையில் பகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்கால் நினைவேந்தலின் போது சிங்கள ராவய அமைப்பினர் அங்கு வந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) கொழும்பு- வெள்ளவத்தை கடற்கரையில் தீபச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது சிங்கள ராவய எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த இடத்திற்கு வருகை தந்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த நினைவேந்தலில் கலந்துக்கொண்டவர்கள் விடுதலைப்புலி அமைப்பின் பணத்தை பெற்று செயற்படுபவர்கள் என்றும், பலஸ்தீனுக்கு ஆதரவாளர்கள் என்றும், இஸ்ரேவுக்கு எதிரானவர்கள் என்று சிங்கள ராவய அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இவ்வாறான கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நினைவேந்தல் நடைபெற்று முடிந்து திரும்பும் போது சிங்கள ராவய அமைப்பினர் சத்தமிட்டு பலமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினார்கள், பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில்தான் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று முடிந்துள்ளது.