செய்திகள்

கொழும்பில் நாளை நீர் வெட்டு

கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் நாளை பிற்பகல் 1 மணிமுதல் நாளை மறுதினம் காலை 5.00 மணிவரை 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே குறித்த நேரப் பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஹங்வெல்ல, கலுஅக்கல, மீப்பே, பாதுக்க, கொடகம, ஹோமாகம, கொட்டாவ, பன்னிபிட்டிய, றுக்மல்கம, பெலவத்தை, மற்றும் மத்தேகொட ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட உள்ளது.

இது தவிர குறித்த காலப் பகுதியில் மகரகம, பொரலஸ்கமுவ, கொழும்பு 08, கொழும்பு 09, மற்றும் கொழும்பு 10 ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

n10