செய்திகள்

பாதுகாப்பு தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் பலி!

பொரளை, வனாத்தமுல்லை, தல்கஸ்வத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

25 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை பெறுவதற்காக இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவர் நேற்றிரவு(13) குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ள நிலையில், இதன்போது குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

-(3)