செய்திகள்

கொழும்பில் விசேட சுற்றிவளைப்பு!

கொழும்பில் மருதானை, தெமட்டகொட மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தினால் நேற்று (11) இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 10 பேர், 01 கிராம் 860 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 08 சந்தேகநபர்கள் மற்றும் 155 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 04 கிராம் கஞ்சாவை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களும், கஞ்சா கலக்கப்பட்ட மாவா 02 கிலோ 72 கிராம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாளிகாவத்தை, மருதானை மற்றும் மட்டக்குளிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 23 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் இன்று (12) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-(3)