செய்திகள்

கொழும்பில் 200 கிலோ கொக்கெயின் மீட்பு : பெறுமதி 200 கோடிக்கும் அதிகமாம்

கொழும்பு ஒருகொடவத்த கொள்களன் களஞ்சிய தொகுதியிலிருந்து 200 கிலோ நிறைகொண்ட கொக்கெயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சீனியை நாட்டுக்கு இறக்குமதி செய்யும் போர்வையில் இந்த பிரேசிலிருந்து கொண்டுவரப்பட்ட கொள்களன் ஒன்றினுள்ளிருந்தே இவை மீட்கப்பட்டதாக போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் பெறுமதி இலங்கை ரூபாவின் 200 கோடிக்கும் அதிகமென தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கொள்கலன் தொடர்பாக எழுந்த சந்தேகத்தையடுத்து இன்று நீதிமன்றத்தின் அனுமதியுடன் அதனை திறந்து பார்த்த போதே கொக்கெயின் மீட்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதேபோன்று கொள்கலனுக்குள்ளிருந்து பல கோடி ரூபா பெறுமதியான கொக்கெயின் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)