கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவும்

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சங்கத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சங்க யாப்பு விதிகள் மீறப்பட்டுக் கொண்டிருப்பதால், சங்க மாண்பையும் சங்கத்தின் ஜனநாயகக் கட்டமைப்பையும் காப்பாற்றும் நோக்கில் அனைத்து உறுப்பினர்களும் பொதுக்கூட்டத்தில் பங்குபற்ற வேண்டும் என்று பிரதான செயற்பாட்டாளர்கள் சிலர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது பொதுச் சபை உறுப்பினர் ஒவ்வொருவரினதும் பிரதான கடமை. புதிய தலைவர், செயலாளர், பொருளாளர் தெரிவுகள் இடம்பெறவுள்ளன.




