செய்திகள்
கொழும்பு பல்கலையில் 2 , 3 , 4ஆம் வருட கலைப்பீட மாணவர்களுக்கு தடை
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப் பீடத்தை சேர்ந்த 2 , 3 மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு பீடத்திற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு பொரளை பகுதியில் பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இன்று காலை முதல் குறித்த வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. -(3)




