செய்திகள்

கொழும்பு பொரளையில் உள்ள தொடர்மாடியொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று

கொழும்பு பொரளையில் உள்ள தொடர்மாடியொன்றில் நான்கு கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதேவேளை குறித்த நபர்கள் புறக்கோட்டை வர்த்தகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தனர் எனத் தெரியவந்ததும் அவர்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தியதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.புறக்கோட்டை வர்த்தகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த குடும்பத்தவர்களே நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.(15)