செய்திகள்

கொழும்பு மக்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்!

களனி ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைவதால் நாளைய தினத்தில் (29) கொழும்பில் பெருவெள்ளம் ஏற்படலாம் எனவும், இதனால் அவசர நிலைமைகளின் போது உடனடியாக வீட்டிலிருந்து எடுத்துச் செல்லக் கூடியவகையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பொதியொன்றை எவ்வேளையிலும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய பிரதேச மக்களை கேட்டுக்கொள்வதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் குணசேகர தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.