கொழும்பு இரத்மலானை – யாழ்ப்பாணம் விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இருந்து ஒரு மணி நேரம் பத்து நிமிடத்தில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் எனவும் இந்த விமான சேவை வாரத்தில் சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நான்கு நாட்களுக்கு காலை வேளைகளில் விமானங்கள் இயக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு வழிக்கட்டணமாக 22 ஆயிரம் ரூபாவும் இருவழிக்கட்டணமாக 41500 அறவிடப்படும் என்றும் இதில் பயணிக்கும் பயணி ஒருவர் 7 கிலோகிராம் பொதியை கொண்டு செல்ல முடியும் எனவும் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் சென்று வருவதற்கும் வசதியாக இருக்கும் எனவும் இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
-(3)




