கோட்டாபயவின் இராணுவ பாதுகாப்பின் ஒரு பகுதி இன்று முதல் விலக்கல்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பின் ஒரு பகுதி இன்று விலக்கிகொள்ளப்பட்டுள்ளது.
விலக்கி கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்குப் பதிலாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தனக்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பை திருப்பப்பெற வேண்டாம் என்று கோட்டாபய, முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தார்.
எவ்வாறாயினும், நபரொருவரின் பாதுகாப்புக்கு யாரை பயன்படுத்துவது என்பது குறித்து பாதுகாப்பு சபைதான் தீர்மானிக்கும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.
n10




