செய்திகள்
கோட்டாபயவுக்கு முன்னாள் ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகள்!
முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளின் கீழ் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தேவையான வசதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று அதிகாலை நாடு திரும்பினார்.
தாய்லாந்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்.
இதனை தொடர்ந்து அவர் தனது வீட்டில் பாதுகாப்புடன் இருக்கின்றார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளை அவருக்கு வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் வழங்கப்படுகின்றன.
-(3)




