கோட்டாபய அரசியலிற்குள் பிரவேசித்தால் ஆதரவு வழங்குவேன் ; பெசில் தெரிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதற்கும், சிறந்த எதிர்க்கட்சி ஒன்றை ஏற்படுத்துவதற்கும் புதிய கட்சியொன்று தேவை என முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
புதிய கட்சிக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலைவராவது குறித்து பெசில் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச அரசியலிற்குள் பிரவேசிப்பாரென்றால் அது வரவேற்கத்தக்க விடயமாகும் என்று குறிப்பிட்டுள்ள பெசில் ராஜபக்ச, அமைக்கப்படவிருக்கும் புதிய கட்சிக்கு அவர் தலைவரானால் அதுவும் வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள பெசில் ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச இந்நாட்டு மக்களது ஏகோபித்த தலைவர் என்பதோடு, நாடாளுமன்றத்திலும் அவரே சிறந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
N5




